Krishii ONE ஏன் உருவாக்கினோம்?
பொழுதுபோக்கு, சப்போர்ட், உங்கள் Krishiinet கணக்கு — எல்லாம் ஒரே ஆப்பில்.
எப்படி தொடங்கியது
OTTplay மூடப்பட்டபோது, வாடிக்கையாளர்கள் எங்களிடம் மீண்டும் மீண்டும் கேட்ட ஒரே கேள்வி: “இப்போ எந்த ஆப் யூஸ் பண்ணணும்?” ஒவ்வொரு பேக்கிலும் வேறு வேறு ஆப்கள் இருந்ததால், எல்லோருக்கும் ஒரே தெளிவான பதில் சொல்வது மிகவும் கடினமாக இருந்தது. அதனால்தான் எங்களுக்கென்று சொந்தமாக ஒரு ஆப் உருவாக்கினோம்.
அந்தப் பதில்தான் Krishii ONE. ஒருமுறை sign in செய்தால் போதும்: உங்கள் பேக்கில் உள்ளவை மட்டும் ஆப்பில் தெரியும்.
உங்கள் பேக்கிற்கு ஏற்றதை மட்டும் காட்டும்
Krishii ONE உங்கள் சப்ஸ்கிரிப்ஷனைப் படித்து, உங்களுக்குப் பொருந்தும் கன்டென்டை மட்டும் காட்டுகிறது. உதாரணமாக, உங்கள் பேக்கில் VZY இருந்தால், Krishii ONE-இல் sign in செய்தவுடன் உங்கள் பேக்கில் உள்ள VZY கன்டென்ட் அப்படியே தெரியும். ஊகிக்க வேண்டாம், ஒவ்வொரு ஆப்பாகத் தேட வேண்டாம்.

Providers → “Your active apps”: உங்கள் பேக்கில் உள்ள ஆப்கள் மட்டும், ஒவ்வொன்றும் எந்த ஆப்பில் திறக்கும் என்பதுடன்.
பொழுதுபோக்கு மட்டுமல்ல
Krishiinet தொடர்பான எல்லாவற்றுக்கும் Krishii ONE ஒரே இடம்:
- பொழுதுபோக்கு: 300+ டிவி சேனல்கள், OTT ஆப்கள், டிவி கைடு, தேடல், புரொஃபைல்கள். மேலும் படிக்க
- சப்போர்ட்: டிக்கெட் போடுங்கள், இன்ஜினியரை டிராக் செய்யுங்கள், நெட்வொர்க் நிலையைப் பாருங்கள். மேலும் படிக்க
- கணக்கு & WiFi: WiFi பெயர், பாஸ்வேர்ட் மாற்றம், உங்கள் பேக், ரினியூவல். மேலும் படிக்க
- வீடு: உங்கள் CCTV கேமராக்களைப் பாதுகாப்பாகச் சேர்க்கலாம். மேலும் படிக்க


